Home விளையாட்டு இந்தியாவில் நடக்கும் காலிறுதி…, சீறும் சிங்க பெண்கள்! தோல்வியை சந்திக்காத அணியுடன் பலப்பரீட்சை!!

இந்தியாவில் நடக்கும் காலிறுதி…, சீறும் சிங்க பெண்கள்! தோல்வியை சந்திக்காத அணியுடன் பலப்பரீட்சை!!

0
இந்தியாவில் நடக்கும் காலிறுதி…, சீறும் சிங்க பெண்கள்! தோல்வியை சந்திக்காத அணியுடன் பலப்பரீட்சை!!
இந்தியாவில் நடக்கும் காலிறுதி..., சீறும் சிங்க பெண்கள்! தோல்வியை சந்திக்காத அணியுடன் பலப்பரீட்சை!!

இந்தியாவில் நடைபெற்று வரும் U17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் இன்று முதல் துவக்க உள்ளது.

U17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து:

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) சார்பாக, 17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான கால்பந்து தொடர் இந்தியாவில் கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கு பெற்ற இந்த தொடர், 4 குரூப்களின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் போல் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த தொடரில், அமெரிக்கா, மொரோக்கோ மற்றும் பிரேசில் என பலம் வாய்ந்த அணிகளுடன் குரூப் A யில் இடம் பெற்ற இந்தியாவுக்கு காலிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லாமல் போனது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, அமெரிக்கா, மொரோக்கோ மற்றும் பிரேசில் ஆகிய அணிகளுக்கு எதிராக போட்டியிட்ட இந்தியா தொடர் தோல்வியை சந்தித்தால் காலிறுதிக்குள் நுழைய தவறியது. இந்நிலையில், வெற்றியின் அடிப்படையில் ஒவ்வொரு குரூப்பின் கீழும், முதல் இரு இடங்களை பிடித்துள்ள அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளன.

சொந்த மண்ணில் போட்டியிடும் சென்னை – ISL லீக்கில் முதல் வெற்றியை தட்டி தூக்கிய East பெங்கால்!!

இதில், குரூப் A யில் அமெரிக்கா மற்றும் பிரேசில், குரூப் B யில் ஜெர்மனி மற்றும் நைஜீரியா, குரூப் C யில் கொலம்பியா மற்றும் ஸ்பெயின், குரூப் D யில் ஜப்பான் மற்றும் தான்சானியா ஆகியவை அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று, முதல் காலிறுதி போட்டியில், தோல்வியை சந்திக்காத அமெரிக்கா, நைஜீரியாவையும், 2 வது போட்டியில் ஜெர்மனி, பிரேசில் அணியையும் எதிர்கொள்ள உள்ளன. இதனை தொடர்ந்து, 26ம் தேதி அரையிறுதியும், இறுதி போட்டி 30ம் தேதியும் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here