ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – பைக், கார் என வாரி வழங்கிய உரிமையாளர்! பணியாளர்கள் குஷி!!

0
ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - பைக், கார் என வாரி வழங்கிய உரிமையாளர்! பணியாளர்கள் குஷி!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் , பிரபல நகைக்கடை உரிமையாளர் தங்கள் கடையின் பெரும்பாலான ஊழியர்களுக்கு பைக், கார் என விலை உயர்ந்த தீபாவளி பரிசுகள் கொடுத்து அசத்தியுள்ளார்.

ஊழியர்கள் மகிழ்ச்சி:

பெரும்பாலான மக்களால் அதிகம் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. இந்த ஆண்டு இந்த பண்டிகை கொண்டாட இன்னும் 7 நாட்களே உள்ளது. இதற்காக பொதுமக்கள் பலரும் கடைவீதிகளில் குவிந்து பொருட்களை வாங்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் விடுமுறை குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் – இதை எப்போதும் கைவிடப்போவதில்லை! முன்னணி நிறுவனங்கள் கன்பார்ம்!!

இந்த நிலையில், சென்னையில் செயல்பட்டு வரும் பிரபலமான நகை கடையின் உரிமையாளர் ஜெயந்தி லால், தங்கள் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுகளை வாரி வழங்கியுள்ளார். அதாவது கடினமான நேரத்திலும் என்னுடன் பயணித்த, ஊழியர்கள் 10 பேருக்கு காரும், 20 பேருக்கு பைக்கும் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள், தீபாவளி பரிசாக இந்த பொருட்களை பெற்றுள்ளதை அடுத்து உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here