புதிய உச்சத்தை தொட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்…, சமூகவலைதளம் மூலம் சாதனை படைப்பு!!

0
புதிய உச்சத்தை தொட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்..., சமூகவலைதளம் மூலம் சாதனை படைப்பு!!
புதிய உச்சத்தை தொட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்..., சமூகவலைதளம் மூலம் சாதனை படைப்பு!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான உள்ளூர் தொடராக ஐபிஎல் விளங்குகிறது. சமீபத்தில் முடிந்த இந்த ஐபிஎல் தொடரின் 16 வது சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது வென்று அசத்தியது. இதன் மூலம், ஐபிஎல் அரங்கில் அதிக முறை (5 முறை) சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இணைந்து கொண்டது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும் டிரெண்டிங்காகவே இருந்தது. இதன் மூலம், தற்போது சாதனை ஒன்றையும் CSK அணி நிகழ்த்தி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, ட்விட்டர் பக்கத்தில் 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்ட ஒரே ஐபிஎல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைத்து முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 மில்லியன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6.8 மில்லியன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5.2 மில்லியன் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3.2 மில்லியன் என ட்விட்டரில் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்ட டாப் 5 அணிகளாக திகழ்கின்றன.

தமிழகத்தில் அரசு பள்ளியில் இந்த ஆசிரியர்களுக்கு நேரும் சோகம்., கல்வித்துறை நடவடிக்கை என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here