![உலகளவில் 10 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 53 ஆயிரத்தை தாண்டிய உயிர்பலி – கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்..! உலகளவில் 10 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 53 ஆயிரத்தை தாண்டிய உயிர்பலி – கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்..!](https://enewz.in/wp-content/uploads/2020/04/corona-main-768x471.jpg)
உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர்.
53 ஆயிரத்தை தாண்டிய பலி…!
உலகளவில் இதுவரை 10,15,877 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 53,218 ஆக உள்ளது. மேலும் இதுவரை 2,12,993 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்காவும், அதிகம் உயிர் இழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலியும் உள்ளது.
![](https://enewz.in/wp-content/uploads/2020/04/corona-italy-1024x768.jpg)
அமெரிக்காவில் இதுவரை 2,45,193 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 6,088 பேர் உயிர் இழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 1,15,242 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 13,915 பேர் உயிர் இழந்துள்ளனர்.
ஒரே நாளில் ஆயிரக்கணக்கில்..!
ஸ்பெயினில் 1,12,065 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 10,348 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அங்கு 81,620 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 3,322 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
![](https://enewz.in/wp-content/uploads/2020/04/corona-italy-2.jpg)
பிரான்ஸ் நாட்டில் இந்த வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 59,105 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 5,387 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |