உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனுக்கு எதிராக மனு தாக்கல்…, 100 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!!

0
உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனுக்கு எதிராக மனு தாக்கல்..., 100 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!!

உலகின் நம்பர் 1 வீரரான செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு எதிராக அமெரிக்காவின் ஹான்ஸ் நீமன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கார்ல்சன் vs ஹான்ஸ் நீமன்:

செஸ் டூரின் ஒரு பகுதியாக ஜூலியஸ் பயர் கோப்பை தொடர் கடந்த மாத இறுதியில் நடந்து முடிந்தது. உலகில் உள்ள 16 நட்சத்திர வீரர்கள் பங்கு பெற்ற இந்த தொடரில், நம்பர் ஒன் வீரர் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இவர், இந்த தொடரில் அமெரிக்காவின் ஹான்ஸ் நீமனை எதிர்த்து விளையாடும் போது, ஒரே ஒரு நகர்த்தலுடன் போட்டியில் இருந்து வெளியேறினார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இது குறித்து பேசிய கார்ல்சன், ஹான்ஸ் நீமன் செஸ் போட்டிகளில் செய்ய கூடாத செயல்களை செய்து, ஏமாற்றி வெற்றி பெற்று வருகிறார் என குற்றம் சாட்டினார். இவரை தொடர்ந்து, பிரபலமான chess.com நிறுவனமும், 19 வயது நிரம்பிய அமெரிக்கர் ஒருவர் ஆன்லைன் கேம்களில் 100 முறைக்கு மேல் ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கலாம் என பெயர் குறிப்பிடாமல் சுட்டி காட்டியிருந்தது.

சொந்த மண்ணில் போட்டியிடும் சென்னை – ISL லீக்கில் முதல் வெற்றியை தட்டி தூக்கிய East பெங்கால்!!

இதன் விளைவால், தனது நற்பெயரும் வாழ்வாதாரமும் கெட்டு போனதாக ஹான்ஸ் நீமன் கூறியுள்ளார். இதையடுத்து, நீமன், chess.com நிறுவனத்தின் மீதும், கார்ல்சன் மற்றும் அவரது நிறுவனமான ப்ளே மேக்னஸ் குழுவின் மீதும் ஃபெடரல் நீதிமன்றத்தில், 100 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கொடுக்கும் படி மனு தாக்கல் செய்துள்ளார். நீமன் தனது 12 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் செஸ் போட்டிகளில் ஏமாற்றினேன். ஆனால் சமீபத்திய போட்டிகளில் எந்த மோசடியும் செய்யவில்லை என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here