மறைந்த பிரிட்டன் ராணி 2வது எலிசபெத் எழுதிய உருக்கமான கடிதம்.,, வைரலாகும் புகைப்படம்!!

0
மறைந்த பிரிட்டன் ராணி 2வது எலிசபெத் எழுதிய உருக்கமான கடிதம்.,, வைரலாகும் புகைப்படம்!!
மறைந்த பிரிட்டன் ராணி 2வது எலிசபெத் எழுதிய உருக்கமான கடிதம்.,, வைரலாகும் புகைப்படம்!!

பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத், தனது பேரனுக்கு கைப்பட எழுதிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரிட்டன் மகாராணி :

கடந்த மாதம் பிரிட்டன் ராணி 2வது எலிசபெத், தன்னுடைய 96வது வயதில் உடல் நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரின் மறைவிற்கு பிறகு அவரது மூத்த மகனான இளவரசர் சார்லஸ், புதிய ராஜாவாக அரியணை ஏறி உள்ளதால், கமீலா ராணியாக உள்ளார். இதையடுத்து மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம் வேல்ஸ் தற்போது இளவரசாகியுள்ளார். இந்நிலையில் ராணி எலிசபெத் தன் மறைவிற்கு முன்பு, அவரது பேரனான இளவரசர் வில்லியம் வேல்ஸ்க்கு கையால் ஒரு சிறிய குறிப்பு எழுதியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது “William, I hope you enjoy opening this each day, by Granny” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ராணி 2வது எலிசபெத், தனது பேரக் குழந்தைகள் மீது மிகவும் அன்பாக இருப்பதால்,அவர்களுடன்அடிக்கடி போட்டோ எடுத்து கொள்வார். குறிப்பாக மன்னர் சார்லஸின் மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி மீது அதிக அன்பு வைத்திருந்தார். இருப்பினும் ஹாரி தனது காதல் மனைவிக்காக அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி, 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

மாநில அரசின் ஜாக்பாட் அறிவிப்பு – மாதம் உங்களுக்கு ரூ.27,000 மிச்சம்! முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்!!

இதையடுத்து அரச குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் வில்லியம் தான் தொடர்ந்து பார்த்து வந்தார். இதனால் அவர் ராணி எலிசபெத்திற்கு மிகவும் செல்ல பேரனாக வலம் வந்தார்.இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக ராணியால் எழுதப்பட்ட செய்தி குறிப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here