பொண்ணுங்க மட்டும்தான் ரொம்ப பிடிக்குமோ..! பிக்பாஸ் பாலா இன்ஸ்டா பதிவு! இணையத்தில் வைரல்!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவரது ரசிகர்கள் இதற்கு கமெண்ட்ஸை வாரி வழங்கிய வண்ணம் உள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர், பிக்பாஸ் போட்டியில், உலகம் முழுதும் உள்ள தமிழர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே பாலா வித்தியாசமாக விளையாடி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார். இறுதியில் நடிகர் ஆரி வின்னராகவும், பாலாஜி முருகதாஸ் ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது பாலா அவரது ரசிகர்களுக்காக ஒரு புது இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு பிடித்த பெண் போட்டியாளர்கள் என்ற கேப்ஷனில் ரம்யா பாண்டியன், அரந்தாங்கி நிஷா, சம்யுக்தா, அர்ச்சனா, கேப்ரியல்லா, ரேகா, அனிதா சம்பத் மற்றும் ஷிவானி ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைபடங்களை பதிவிட்டுள்ளார்.

இதற்கு இவரின் ரசிகர்கள், பல்வேறு விதமான கமெண்டுகளை அளித்து வருகின்றனர். அதில் ஒருவர் எல்லாரும் இருகாங்க.. ஆனா சனம் ஷெட்டி காணோமே.. என்று கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவரோ பொண்ணுங்க மட்டும் தான் பிடிக்கும் போல என்று கமெண்ட் செய்துள்ளார். கமெண்ட்ஸ் மட்டுமில்லாமல் லைக்சும் இவரது பதிவிற்கு இப்போது எகிறுகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here