புதிய தலைவராக பொறுப்பேற்ற ரோஜர் பின்னி.., BCCI யில் நிகழப்போகும் புது திருப்பங்கள்.!!

0
புதிய தலைவராக பொறுப்பேற்ற ரோஜர் பின்னி.., BCCI யில் நிகழப்போகும் புது திருப்பங்கள்.!!
புதிய தலைவராக பொறுப்பேற்ற ரோஜர் பின்னி.., BCCI யில் நிகழப்போகும் புது திருப்பங்கள்.!!

கங்குலிக்கு அடுத்ததாக பிசிசிஐ யின் புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி இன்று பொறுப்பேற்க உள்ளார்.

ரோஜர் பின்னி

BCCI தலைவராக கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி பதவி காலம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனால் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. அதன்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் 91 வது பொதுக்குழு கூட்டம் இன்று மும்பையில் அரங்கேற உள்ளது. இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்து புதிய தலைவரை நியமனம் செய்ய உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி இந்த பதவிக்கு போட்டியின்றி கர்நாடகா கிரிக்கெட் சங்க நிர்வாகி ரோஜர் பின்னி இன்று பதவியேற்க உள்ளார். இதனால் இவர் BCCI யில் பல அதிரடியான மாற்றங்கள் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தின் பொதுச் செயலாளர் ஜெய் ஷா தேர்வாகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

அட என்ன ஒரு கேட்ச்…, பீல்டிங்கில் துவம்சம் செய்த விராட் கோஹ்லி!!மிரண்டு போன ரசிகர்கள்

இதன் பிறகு ICC தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக யார் போட்டியிட போகிறார் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனவே இது குறித்தும் இன்று பொதுக் குழுவில் விவாதம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த பதவிக்கு முன்னாள் BCCI தலைவர் சவுரவ் கங்குலி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here