Home சீரியல் எல்லை மீறும் ராதிகாவின் டார்ச்சர்.,எழிலிடம் மல்லுக்கு நின்ற கோபி – சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி எபிசோட்!!

எல்லை மீறும் ராதிகாவின் டார்ச்சர்.,எழிலிடம் மல்லுக்கு நின்ற கோபி – சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி எபிசோட்!!

0
எல்லை மீறும் ராதிகாவின் டார்ச்சர்.,எழிலிடம் மல்லுக்கு நின்ற கோபி – சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி எபிசோட்!!
எல்லை மீறும் ராதிகாவின் டார்ச்சர்.,எழிலிடம் மல்லுக்கு நின்ற கோபி - சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி எபிசோட்!!

விஜய் டிவி பாக்யலக்ஷ்மி சீரியலில், ராதிகாவுடன் சேர்ந்து நல்லா வாழ்ந்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த கோபிக்கு அடுத்தடுத்து ஆப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் சீரியல் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா பிரியாணி தான் செய்கிறார் என்று மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்த கோபிக்கு ஓட்ஸ் மிக்ஸ் தான் கிடைத்தது. அது பிடிக்கவில்லை என்றாலும் சகித்து கொண்டு சாப்பிட்டு விட்டார். மேலும் ராதிகா கோபியை தூங்கவில்லையா என கேட்க, இல்லை வேலை முடித்துவிட்டுத்தான் தூங்க வேண்டும் என சொல்லிவிட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின் ராதிகாவை பக்கத்தில் வந்து உட்கார சொல்கிறார், ஆனால் அவர் வரவில்லை லவ் மேரேஜ் பண்ணிட்டு ஒரு ரொமான்ஸ் கூட பண்ண மாட்டேங்கிற என கோபி புலம்புகிறார். இதையடுத்து கோபி, ரூமிற்கு செல்கிறார், அப்போது கட்டிலில் மயூ உடன் சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் ராதிகா. மேலும் கோபி தூங்குவதற்கு அந்த கட்டிலில் இடம் இல்லை, அதனால் அவர் வேறு வழி இல்லாமல் தரையில் பெட் சீட் போட்டு படுத்து தூங்குகிறார்.

“பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு”., ஹரிஷ் கல்யாண் திருமண ஏற்பாடுகள் கோலாகலம் – வைரலாகும் போட்டோ!!

மேலும் என் நிலைமை இப்படி ஆயிடுச்சே என புலம்ப ஆரம்பித்துவிட்டார். மற்றொரு பக்கம் செழியன் ஜாகிங் போய் விட்டு வந்த போது, ஈஸ்வரி கோபியை பார்த்தியா என கேட்க அவர் இல்லை என சொல்லிவிட்டார். ஆனால், எழில் ஜாக்கிங் போகும்போது கோபியை பார்க்கிறார். அப்போது கோபி சும்மா இருக்காமல் எழில் வேகமாக ஓடுவதை பார்த்து அவருக்கு டப் கொடுக்க வேகமாக ஓடி வருகிறார், வந்து எழிலிடம் நான் 20 வயசுல இருந்தே ஓடிக்கிட்டு உடம்பை ஃபிட்டா வச்சுட்டு இருக்கேன். நம்ம 2 பேருக்கும் போட்டி வச்சுக்கலாமா என கோபி கேட்க எழில் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார்.

அதற்கு கோபி என்ன பயமா, நீயும் நானும் ஒன்னா போனா அண்ணன் தம்பினு தான் சொல்லுவாங்க, அந்த அளவுக்கு நா பிட் என்று கொஞ்சம் ஓவரா பில்டப் கொடுக்க, இருவருக்கும் போட்டி நடக்கிறது. போட்டியில் கோபியால் வெகு தூரம் ஓட முடியாமல்,எழிலிடம் தோற்று விட்டார். இதையடுத்து கோபி, வீட்டுக்கு வந்து இது ராதிகா வீடு என்பதை மறந்து பழக்க தோஷத்தில் பாக்கியா ஒரு பிளாக் காபி என சொல்ல , உடனே வாயை மூடி விட்டார். அடுத்து ராதிகா வந்ததும் ஒரு காபி கிடைக்குமா என கேட்க ராதிகா முறைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here