“பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு”., ஹரிஷ் கல்யாண் திருமண ஏற்பாடுகள் கோலாகலம் – வைரலாகும் போட்டோ!!

0
"பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு"., ஹரிஷ் கல்யாண் திருமண ஏற்பாடுகள் கோலாகலம் - வைரலாகும் போட்டோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஹரிஷ் கல்யாணின் திருமண சடங்குகள் சென்னையில் உள்ள பிரம்மாண்ட கல்யாண மஹாலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சடங்குகள் தீவிரம் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு, ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது மட்டுமில்லாமல் விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பல பெண் ரசிகைகளின் மனதை வென்றெடுத்தார். இந்த நிலையில் இவர் சில தினங்களுக்கு முன், இன்ஜினியரான நர்மதா என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்தார். இது போக விரைவில் தங்கள் திருமணம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

தலைமுடியெல்லாம் விரித்து போட்டு விகாரமாக மாறிய நடிகை ஸ்ருதி ஹாசன்.. அவருக்கு அப்படி என்ன தான் ஆச்சு!!

அந்த வகையில், அக்டோபர் 28ஆம் தேதியான இன்று சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மஹாலில் காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் தங்களின் திருமணம் நடக்கும் என நடிகர் ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது இவரின் திருமண சடங்குகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும், இவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here