Home செய்திகள் TNPSC தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்.., யார் யார் தெரியுமா?? முழு விவரம் இதோ!!!

TNPSC தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்.., யார் யார் தெரியுமா?? முழு விவரம் இதோ!!!

0
TNPSC தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்.., யார் யார் தெரியுமா?? முழு விவரம் இதோ!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். ஆனால் இதில் பல பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் தமிழக அரசு 5 புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார், மருத்துவர் ஏ.தவமணி, மேயர் சிட்டிபாபு தெருவை சேர்ந்த உஷா சுகுமார், கோவை ஸ்ரீ நாராயண குரு மேலாண்மை கல்வி நிறுவனம் முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகிய ஐந்து பேரை புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளனர். இவர்கள் 6 வருடங்கள் அல்லது 62 வயது வரை பணியில் நீடிப்பார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here