நடிகை அதிதி சங்கர் மாவீரன் படத்தில் நடித்து முடித்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நடிகை அதிதி சங்கர்:
தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அதிதி சங்கர். நடித்த முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதனை தொடர்ந்து இவர் இளம் நடிகர் விஷ்ணு விஷால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் அது ஒரு வதந்தி என்று அவரே விளக்கம் அளித்தார். இப்படி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி தாம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை அதிதி சங்கர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நண்பன் திரைப்படத்தில் இடம்பெறும் ஒல்லி பெல்லி பாடலுக்கு அற்புதமாக நடனமாடி உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram