என்னப்பா சொல்றீங்க.. பிளாக்பஸ்டர் படத்தை தவறவிட்ட சூர்யா.. சுவாரசிய தகவல் உள்ளே!!

0
என்னப்பா சொல்றீங்க.. பிளாக்பஸ்டர் படத்தை தவறவிட்ட சூர்யா.. சுவாரசிய தகவல் உள்ளே!!

தென்னிந்திய திரையில் தனக்கென தனி புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சூர்யா. தற்போது இவர் கங்குவா படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடிகர் சூர்யா தவறவிட்ட ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம்.

அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அந்தாதுன். இந்த படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா ஹீரோவாக நடிக்க, ராதிகா ஆப்தே முக்கிய ரோலில் நடித்திருப்பார். இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது, அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்து அசத்தியது.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் சூர்யாவைதான் அணுகி இருக்கிறார் ஸ்ரீராம். ஆனால் சூர்யா வேறு படத்தில் பிசியாக இருந்ததால் அதைத் தவிர்த்து விட்டாராம். இத்திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த ஃபீச்சர் படம், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய புதிய திட்டம்., 100 ரூபா இருந்தாலே போதும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here