‘என்னை போல ரோஹித் ஷர்மாவால் ஆட முடியுமா’…,நடிகர் சிவா நக்கல்…,

0
'என்னை போல ரோஹித் ஷர்மாவால் ஆட முடியுமா'...,நடிகர் சிவா நக்கல்...,
'என்னை போல ரோஹித் ஷர்மாவால் ஆட முடியுமா'...,நடிகர் சிவா நக்கல்...,

தமிழ் திரைப்பட நடிகர் சிவா, கிரிக்கெட்டர் ரோஹித் ஷர்மாவுடன் இணைத்து போடப்பட்ட மீம்ஸ்களுக்கு பதில் அளித்துள்ளார்.

நடிகர் சிவா

தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் சிவா. பல்வேறு நகைச்சுவை திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் விரும்பப்படும் நடிகராக வலம் வரும் சிவாவுக்கு அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற செல்லப் பெயரும் உண்டு. இப்படி இருக்க நடிகர் சிவா தற்போது ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் சிவாவுடன் இணைந்து நடிகைகள் அஞ்சு குரியன், மேகா ஆகாஷ் மற்றும் மாகாபா ஆனந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ப்ரோமோஷன் செய்யும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவா, தன்னை சுற்றி வலம் வரும் மீம்ஸ் குறித்து சில ஸ்வாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

படமாகும் கிரிக்கெட்டர் கங்குலி வாழ்க்கை…,இவர் தான் நடிக்கிறாரா….,

அதாவது, நடிகர் சிவா கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவை போல முக அமைப்பு கொண்டதாக பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தது. இது குறித்து அவர் கூறும் போது, ‘ரோஹித் ஷர்மாவை என்னோடு இணைத்து பேசுகிறார்கள். அவரைப் போல என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது. என்னைப் போல அவரால் டான்ஸ் செய்ய முடியாது’ என அவரது பாணியில் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here