![சென்னை போயஸ் கார்டனில் நடிகர் தனுஷின் புதுவீடு பூமி பூஜை – ரஜினிகாந்த் பங்கேற்பு!! சென்னை போயஸ் கார்டனில் நடிகர் தனுஷின் புதுவீடு பூமி பூஜை – ரஜினிகாந்த் பங்கேற்பு!!](https://enewz.in/wp-content/uploads/2021/02/dhanush-new-house-102021m-768x432.jpg)
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் புதுவீடு கட்ட உள்ளார். அதற்கான பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷின் புதுவீடு பூமி பூஜை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். ஒவ்வொரு படங்களிலும் தன்னால் முயன்ற அளவுக்கு நடிப்பில் வித்தியாசங்களை காட்டி நடித்தும் வரும், பன்முக திறன் கொண்டவர் நடிகர் தனுஷ். இவரால் 20 வயது ஆணைப்போலவும், 50 வயது ஆளைப்போலவும் ஒரே நேரத்தில் நடிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ‘அசுரன்’ திரைப்படம்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தனது கடின உழைப்பால் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருக்கும் இவர் கைவசம் தற்போது அதிக திரைப்படங்கள் உள்ளது. தமிழில் ‘கர்ணன்’ மற்றும் ‘ஜெகமே தந்திரம்’ ஆகிய படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது. மேலும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தனுஷின் மாமனார் ரஜினிகாந்த்துக்கு சென்னை போயஸ் கார்டனில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் நடிகர் தனுசும் போயஸ் கார்டனில் ஒரு இடம் வாங்கியுள்ளார்.
அரசியலுக்கு வரும் நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார் – பாஜக.,வில் ஐக்கியம்!!
வீடு கட்டுவதற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. அந்த பூஜையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரி ராஜாவும் பூமி பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் உடல்நலம் தேறின பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.