Saturday, June 29, 2024

ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்களுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு!!

Must Read

நாடு முழுவதிலும் செயல்படும் ராணுவ கேன்டீன்களில் இனி வெளிநாட்டு பொருட்கள் வாங்கி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வாங்குவது ஊக்குவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிடிஎஸ் எனப்படும் ராணுவ கேன்டீன்கள்:

இந்தியாவில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ராணுவ கேன்டீன்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதிலும் 4000க்கும் அதிகமான கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த கேன்டீன்களில் அனைவருக்கும் தேவையான மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள் மற்றும் வெளிநாட்டு, உள்நாட்டு மது வகைகள் விற்கப்படுகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பொருட்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. இந்த கேன்டீன்கள் இந்தியாவின் முப்படைகளின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இந்த கேன்டீன்களில் பல வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து நேரடியாக 400க்கும் அதிகமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த 19 ஆம் தேதி பாதுகாப்பு துறை ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டது. அதில் கூறப்பட்டதாவது, இனி இந்த கேன்டீன்களில் வெளிநாட்டு உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் மூலமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இனி அதிகமாக வாங்குவர் என்று நம்பப்படுகிறது. அதே போல் பிரதமர் நரேந்திர மோடியின் உள்நாட்டு பொருட்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்கும் வண்ணமாக இந்த நிலைப்பாடு இருக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -