நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மம்தா மோகன்தாஸ், நட்டி, பாரதிராஜா, சிங்கம்புலி, அபிராமி, முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இப்படம் ரிலீஸாகி 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இதுவரை உலக அளவில் மகாராஜா படம் ரூ. 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இனி வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/06/maharaja-22-1.jpg)
Enewz Tamil WhatsApp Channel
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் வருகிறதா? நடிகை சொன்ன பதில் வைரல்!!