இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மே 26) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி போட்டியின் போது மழை குறுக்கிடாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/05/ipl-indian-22-1-1024x768.jpg)
அதாவது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 38 C மற்றும் குறைந்தபட்சம் 31 C என்று வானிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 கி மீ / 15 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போட்டி நடைபெறும் நாள் முழுவதிலும் மழை அச்சுறுத்தல் இருக்காது என தெரிகிறது.