![92 ஆண்டுகால வரலாற்றை மாற்றி அமைத்த நியூசிலாந்து அணி…, சொந்த மண்ணில் கெத்து காட்டி அசத்தல்!! 92 ஆண்டுகால வரலாற்றை மாற்றி அமைத்த நியூசிலாந்து அணி…, சொந்த மண்ணில் கெத்து காட்டி அசத்தல்!!](https://enewz.in/wp-content/uploads/2024/02/fff-le-768x432.jpg)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட திட்டமிட்டிருந்தது. இதன்படி, விளையாடப்பட்ட முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கிய 2வது போட்டியில், முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 242 ரன்களும், நியூசிலாந்து அணி 211 ரன்களும் எடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, 31 ரன்கள் முன்னிலையில் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தனது 2வது இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுக்க, 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன் 92 ஆண்டு கால வரலாற்றையும் மாற்றி அமைத்துள்ளது. அதாவது, 2-0 என நியூசிலாந்து அணி தொடரை வென்றதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்று அசத்தி உள்ளது. இந்த தொடரில், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 118, 109, 43*, 133* என 3 முறை சதம் அடித்து அசத்தியுள்ளார்.