கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இதுவரை இஸ்ரேலில் 1400 பேரும், பாலஸ்தீனர்கள் 4,100 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இப்போரினால் பல குழந்தைகள், பெண்கள் உயிரிழந்து வருவதால், பலரும் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஹாலிவுட் கலைஞர்கள் பலரும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதில் “உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் அனைத்து தலைவர்களும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். காசா மீதான குண்டுவெடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சிறிதும் தாமதமின்றி போர் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உங்களை வலியுறுத்துகிறோம். இந்த கொடுமைகளை கண்டுகொள்ளாமல் மௌனமாக இருந்தோம் என எதிர்கால சந்ததியினர் சொல்ல நாங்கள் விரும்பவில்லை.” என குறிப்பிட்டுள்ளனர்.