![CWC புகழுக்கும் அவங்க மனைவிக்கும் இடையே என்னாச்சு.., அதிர்ச்சி வீடியோ வைரல்!! CWC புகழுக்கும் அவங்க மனைவிக்கும் இடையே என்னாச்சு.., அதிர்ச்சி வீடியோ வைரல்!!](https://enewz.in/wp-content/uploads/2023/01/puga-fet-768x576.jpg)
CWC புகழுக்கும் அவங்க மனைவிக்கும் இடையே என்னாச்சு.., அதிர்ச்சி வீடியோ வைரல்!!
குக் வித் கோமாளி புகழ் மனைவி பென்சி வெளியிட்ட முக்கியமான வீடியோவை பார்த்து, நெட்டிசன்கள் பலரும் இது குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
வைரல் வீடியோ :
விஜய் டிவி காமெடி நட்சத்திரங்களில் ஒருவர் புகழ். ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், சிரிச்சா போச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர், அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும், கோமாளியாக பங்கேற்ற இவர் தற்போது வெள்ளித்திரையில் நாயகனாக வளரும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அஜித், அருண் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் டிவி புகழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பென்சி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரது மனைவி பென்சி இன்ஸ்டா பக்கத்தில், தன் வளர்ப்பு நாயுடன் எடுத்துக் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
செம்பருத்தி ஹீரோ நடிக்கும் சீரியலில் இவ்வளவு பெரிய மாற்றமா? சேனல் நிர்வாகத்தின் திடீர் முடிவு!!
இதைப் பார்த்த புகழ், புருஷன் இங்க தனியா இருக்கேன். என்ன விட்டுட்டு அம்மாவும் பொண்ணும் அங்க ஆட்டம் போடுறீங்களா? வந்து உங்களை பார்த்துக்கிறேன், miss you என காமெடியாக பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும், புகழ் ஏதாவது பட ஷூட்டிங் காரணமாக வெளியே இருக்காரு போல, அதனாலதான் இப்படி கமெண்ட் போட்டு இருக்காரு என கிண்டல் செய்து வருகின்றனர்.
View this post on Instagram