வலுப்பெறும் டாலர்.,, இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு., இப்படியே போன நிலைமை இலங்கையைவிட மோசமாயிடும்?

0
வலுப்பெறும் டாலர்.,, இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு., இப்படியே போன நிலைமை இலங்கையைவிட மோசமாயிடும்?

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரூபாயின் மதிப்பு சரிவு:

கொரோனா பொதுமுடக்கம், பணவீக்கம், உக்ரைன் போர் எதிரொலி போன்ற காரணங்களால் அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்த நிலையில் சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது. இதையடுத்து அனைவரின் கவனமும் கணிசமாக அமெரிக்க டாலரின் பக்கம் திரும்பியுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதன் தாக்கம் ஆசிய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து வருகிறது. அந்த வகையில் இன்று இந்திய ரூபாயின் மதிப்பு புதிய சரிவைக் கண்டுள்ளது. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை 82.90ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது.

தமிழக பள்ளி/கல்லூரி பேருந்துகளுக்கு புதிய நடைமுறைகள் வெளியீடு – உடனே செய்து முடிக்குமாறு அதிரடி உத்தரவு!!

இது முந்தைய அமர்வில் 82.75ரூபாயாக இருந்தது. கடந்த 8 வர்த்தக தினங்களில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டு வந்திருக்கிறது. மேலும் ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான உள்நாட்டு நாணயம் 12 காசுகள் சரிந்து 82.91 ஆக இருந்ததாக PTI தெரிவித்திருந்தது. இப்படி ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவது தொடர்ந்தால், இலங்கை போல இந்தியாவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்க வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here