தீபாவளி பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு “இத்தனை” நாட்கள் விடுமுறையா? முழு விவரம் இதோ!!

0
தீபாவளி பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு "இத்தனை" நாட்கள் விடுமுறையா? முழு விவரம் இதோ!!

இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்களை பின்பற்றுகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வங்கிகளுக்கு விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை நாட்காட்டியின்படி, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் இந்த மாதத்தில் இரண்டு, நான்காம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து 21 நாட்கள் மூடப்படுபடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி, மாநிலத்தைப் பொறுத்து சில மாநில விடுமுறைககள் மாறுபடும். தமிழகத்தில் இந்த(அக்டோபர்) மாதம் ஒட்டுமொத்தமாக 10 நாட்கள் மட்டும் தான் வங்கிகளுக்கு விடுமுறை. இந்நிலையில் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாளை (அக்டோபர் 22) முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

  • அக்டோபர் 22: நாளை தன்தேராஸ்/ நான்காவது சனிக்கிழமை என்பதில் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 23: ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்
  • அக்டோபர் 24: காங்டாக், ஹைதராபாத், இம்பால் தவிர இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்படும் .(காளி பூஜை/தீபாவளி/ (லக்ஷ்மி பூஜை)/நரக சதுர்த்தசி)
  • அக்டோபர் 25: காங்டாக், ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை (லக்ஷ்மி பூஜை/தீபாவளி/கோவர்தன் பூஜை)

  • அக்டோபர் 26: அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூர், டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். (கோவர்தன் பூஜை/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்/பாய் பிஜ்/பாய் துஜ்/தீபாவளி (பலி பிரதிபதா)/லக்ஷ்மி பூஜை/சேர்ப்பு நாள்)
  • அக்டோபர் 27: காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். (பைடூஜ்/சித்ரகுப்த் ஜெயந்தி/லக்ஷ்மி பூஜை/தீபாவளி/நிங்கோல் சக்கௌபா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here