தமிழக மக்களுக்கு ஓர் நற்செய்தி., கூடுதல் டோக்கன் வழங்க ஏற்பாடு? பதிவுத்துறை அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் சுபமுகூர்த்த தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் போது சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கான டோக்கன்கள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 15ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், கூடுதல் டோக்கன் வழங்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை ஏற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது 2024 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 18 முதல் 31ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவிட்டுள்ளனர். அதன்படி ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் 100 க்கு பதிலாக 150 எனவும், 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் 200 க்கு பதிலாக 300 எனவும், தட்கலில் 12 க்கு பதிலாக 20 எனவும் டோக்கன் வழங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here