வெள்ள பாதிப்புகளை விஜய் நேரில் ஆய்வு., மக்களுக்கு உதவித்தொகை வழங்கி ஆறுதல்!!!

0
கோலிவுட் சினிமாவில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். எக்கச்சக்க திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கோடான கோடி ரசிகர்களை திரட்டி இருக்கும் இவர் தற்போது சினிமாவை தாண்டி அரசியலில் கால் பதித்துள்ளார்.  சில மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியிருந்தார்.
இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான  நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தற்போது நேரில் சென்றுள்ளார். மேலும் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவித்தொகையை வழங்கியுள்ளார்.  அதோடு 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை உள்ளிட்டு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை 1500 பேருக்கு வழங்கினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here