பெட்ரோல் & டீசல் விலை வரலாறு காணாத உயர்வு – வாகன ஓட்டிகள் அதிரிச்சி..!

0

சென்னையில் கடந்த 20 நாட்களாக பெட்ரோல் & டீசல் விலைகள் உயர்ந்தது போலாவே இன்றும் விலை அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல் & டீசல் வரலாறு காணாத உயர்வு..!

இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் & டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 7ம் தேதியில் இருந்து இன்று வரை 20 நாட்களாக பெட்ரோல் & டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

கடந்த 7ம் தேதி முதல் பெட்ரோல் விலை ரூ.7.83ம், டீசல் விலை ரூ.9.22ம் வரலாற்றில் முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல் & டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய விலை..!

petrol price
petrol price

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து 83.37 ரூபாய்க்கும், டீசல் 15 காசுகள் உயர்ந்து 77.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here