“வெல்கம் பாகிஸ்தான் ஃப்ரம் ஆஸ்திரேலியா ஏர்போர்ட்” – பாபர் அசாம் ட்விட்டருக்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்!!

0

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பாகிஸ்தான் உலக கோப்பையில் தோல்வியடைந்த நிலையில், பாபர் அசாமின் ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது வைரலாகி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

பாகிஸ்தான் அணி:

டி20 உலக தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இந்தியாவிடம் கடைசி ஓவரின் இறுதிப் பந்தில் தோல்வி அடைந்திருந்தது. இதே போல, வளர்ந்து வரும் ஜிம்பாப்வே அணியிடம், 130 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் பாகிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தொடர் தோல்வியால் பாகிஸ்தான் அணி, ஒரு புள்ளி கூட பெறாமல், குரூப் 1 புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் தற்போது வரை எழுந்து வருகின்றன. இந்த வகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. இந்த தொடருக்கு முன், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், “welcome zimbaway” என்று zimbabwe க்கு பதில் தவறாக தனது ட்விட்டர் பக்கத்தில் அப்போது பதிவிட்டுருந்தார்.

உலக கோப்பையில் ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்த பிறகு இந்த பதிவானது மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த பதிவிற்கு சிலர், வெல்கம் பாகிஸ்தான் ஃப்ரம் ஆஸ்திரேலியா ஏர்போர்ட், வெல்கம் ஜிம்பார்பர் என்று கிண்டல் செய்தும், தைரியமாக இருங்கள் என்று சிலர் நம்பிக்கை அளித்தும் வருகிறார்கள். நாளை பாகிஸ்தான் அணியானது நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வென்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here