Home சீரியல் எதிர் வீட்டுக்கு குடி வரும் கோபி.., கொலை செய்ய திட்டம் போடும் எழில்.., இன்றைய பரபரப்பான எபிசோட்!!

எதிர் வீட்டுக்கு குடி வரும் கோபி.., கொலை செய்ய திட்டம் போடும் எழில்.., இன்றைய பரபரப்பான எபிசோட்!!

0
எதிர் வீட்டுக்கு குடி வரும் கோபி.., கொலை செய்ய திட்டம் போடும் எழில்.., இன்றைய பரபரப்பான எபிசோட்!!
எதிர் வீட்டுக்கு குடி வரும் கோபி.., கொலை செய்ய திட்டம் போடும் எழில்.., இன்றைய பரபரப்பான எபிசோட்!!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில், கோபி எதிர் வீட்டுக்கு குடி வந்த விஷத்தை கேட்டு பொறுக்க முடியாமல் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற எழில், செய்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான எபிசோட்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி‌ சீரியலில், அனைவரின் எதிர்ப்பை மீறி கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கோபி,ராதிகா, மயூ மூவரும் பாக்கியா வீட்டிற்கு எதிரில் குடி வந்துள்ளனர். இதை நினைத்து அதிர்ச்சியில் பாக்கியா தனியாக அமர்ந்து இருக்கும் போது, செல்வி வருகிறார். அப்போது அவர், பாக்கியவிடம் எதிர் வீட்ல யாரோ புதுசா கல்யாணம் ஆனவங்க வந்து இருக்காங்க யாருன்னு தெரியுமா என கேட்க, அதற்கு பாக்கியா இனியா அப்பாவும் ராதிகாவும் தான் வந்து இருக்காங்க என சொல்கிறார். இதை கேட்டு செல்வி அதிர்ச்சி அடைகிறார்

மற்றொரு பக்கம் கோபி டிரைவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, செழியன் அந்த பக்கமாக ஜாகிங் போயிட்டு வருகிறார். அப்போது அவரிடம் பேச கோபி முயற்சி செய்கிறார். ஆனால் செழியன் எதுவும் பேசவில்லை, அமைதியாக வந்துவிடுகிறார். இதையடுத்து செழியன் வீட்டுக்கு வந்து, ஜெனியிடம் கோபி எதிர் வீட்டில் குடி வந்துள்ள விஷயத்தை சொல்ல அவரும் அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து கோபி பாக்கியா வீட்டை பார்த்து கொண்டு இருக்கிறார், அப்போது வந்த ராதிகா என்ன உங்க வீட்டையே பார்த்துகிட்டு இருக்கீங்க உங்க வீட்டு நியாபகம் வந்துருச்சா, என்று கேட்க அதெல்லாம் கிடையாது அது என் வீடு இல்லை இதுதான் என் வீடு. நாம அவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும் என்று சொல்கிறார்.

மறுபக்கம் பாக்கியா வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென செழியன் அழ எல்லோரும் குழப்பத்தில் என்னாச்சு ஏன் அழுவுற என்று விசாரிக்க கோபி எதிர் வீட்டுக்கு குடி வந்திருப்பதை சொல்ல அனைவரும் அதிர்ச்சி ஆகிவிட்டனர். இதை கேட்ட எழில், கிச்சனுக்கு சென்று கத்தியை எடுக்க எடுக்க இதை பார்த்து அனைவரும் பேரதிர்ச்சி அடைகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here