இனி கல்வி இடைநிற்றலே இருக்காது.,, 8 நகரங்களில் புதிய ஸ்கூல்ஸ்.,, முக்கிய வாக்குறுதி!!

0
இனி கல்வி இடைநிற்றலே இருக்காது.,, 8 நகரங்களில் புதிய ஸ்கூல்ஸ்.,, முக்கிய வாக்குறுதி!!
இனி கல்வி இடைநிற்றலே இருக்காது.,, 8 நகரங்களில் புதிய ஸ்கூல்ஸ்.,, முக்கிய வாக்குறுதி!!

குஜராத் மாநிலத்தின் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் முக்கிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

வாக்குறுதி:

குஜராத் மாநிலத்தில் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதியுடனும், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வருகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது பதவிக் காலம் முடிவடைவதற்கு 6 மாத கால அவகாசம் இருக்கும் போதே, தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின் படி, இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையும் குஜராத் சட்டப்பேரவையும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குஜராத்திலும், இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக ஆளும் கட்சியாக இருந்தாலும், இவ்விரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக இருப்பது காங்கிரஸ். ஆனால், தற்போது வரை பாஜகவுக்கும், காங்கிரஸும் வேட்பாளர்கள் யாரையும் அறிவிக்கவில்லை.

இனி மருத்துவக்கல்வியை தமிழில் தொடரலாம்?? ஆளுநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசாரம் மாநிலத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது டெல்லி துணை முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா , குஜராத் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வெற்றி அடைய செய்தால் சூரத், அகமதாபாத், ஜாம்நகர், வதோதரா,ராஜ்கோட், பாவ் நகர், காந்திநகர் மற்றும் ஜூனாகத் ஆகிய 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் ஒரு ஸ்கூலை கட்டுவோம் என வாக்குறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here