Home சீரியல் ராதிகாவால் திண்டாடும் கோபி.,குடும்பத்துடன் கொண்டாடும் பாக்கியா – விறுவிறுப்பாகும் சீரியல்!!

ராதிகாவால் திண்டாடும் கோபி.,குடும்பத்துடன் கொண்டாடும் பாக்கியா – விறுவிறுப்பாகும் சீரியல்!!

0
ராதிகாவால் திண்டாடும் கோபி.,குடும்பத்துடன் கொண்டாடும் பாக்கியா – விறுவிறுப்பாகும் சீரியல்!!
ராதிகாவால் திண்டாடும் கோபி.,குடும்பத்துடன் கொண்டாடும் பாக்கியா - விறுவிறுப்பாகும் சீரியல்!!

கோபி-ராதிகா திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக போகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது ட்விஸ்டுகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்:

ராதிகா, கோபி, மயூ மூன்று பேரும் பாக்கியா வீட்டின் எதிரில் குடி வந்துள்ளனர். இதனால் எழில், ஈஸ்வரி, ராமமூர்த்தி, இனியா உட்பட அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் வர்ஷினி, எழிலிடம் ப்ரொபோஸ் செய்ய, நான் அமிர்தாவை தான் லவ் பண்ணுகிறேன் என சொல்லி வர்ஷினியின் காதலை அவர் மறுத்துவிட்டார். மறுபக்கம் வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவிடம் காபி கேட்க, அதற்கு ராதிகா ஆர்டர் செய்து சாப்பிடுங்க என சொல்லிவிட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து கோபி எனக்கு பசிக்குது என்று ராதிகாவிடம் சொல்ல, அப்போது மயூவுக்கு homework சொல்லி கொடுக்க சொல்கிறார். தொடர்ந்து ராதிகா நான் சமைக்க போகிறேன் என கிச்சனுக்கு போய் விட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா, குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாணி சமைத்து வைத்திருக்கிறார். அதற்கு எழில்,என்னமா ஸ்பெஷல் என்று கேட்க சமையல் ஆர்டர் நன்றாக முடிந்ததற்கு மண்டபம் ஓனர் பணம் கொடுத்தார். அதை கொண்டாடத்தான் பிரியாணி செய்தேன் என கூறினார் பாக்கியா.

கர்ப்பமாக இருக்கும்  சமந்தா.., வெளிவர இருக்கும்  முழு உண்மை.., நாளைக்கு 5 மணி வர  Wait பண்ணுங்க ரசிகர்களே!!

மறுபுறம் கோபி, மயூவிடம் பிரியாணி வாசனை வருதே, உங்க அம்மா பிரியாணி செய்வாங்க போல என்று சொல்ல, அதற்கு மயூ அம்மா செய்தால் இப்படி வாசனை வராது என்று சொல்கிறார். அப்போது ராதிகா சாப்பாடு எடுத்து வர கோபி பிரியாணி வருகிறது என குஷியில் இருந்தார். இருப்பினும் சாப்டிட போகும் போது தான் தெரிகிறது அது ஓட்ஸ் மிக்ஸ். இதை பார்த்த கோபி அதிர்ச்சி ஆகிவிட்டார். பின்னர் பிடிக்காமல் அந்த ஓட்ஸ் மிக்ஸை சாப்பிட்டார். ராதிகாவின் இந்த தொடர் பலி வாங்கல் நடவடிக்கையால் கோபி நிலை குலைந்து போவதுடன் இன்றைய எபிசோட் நிறைவுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here