![வாரிசுக்கு பிறகு தில் ராஜு போட்ட மாஸ்டர் பிளான் .., தெளிவாக அந்த நடிகருக்கு காயை நகர்த்திய படக்குழுவினர்!! வாரிசுக்கு பிறகு தில் ராஜு போட்ட மாஸ்டர் பிளான் .., தெளிவாக அந்த நடிகருக்கு காயை நகர்த்திய படக்குழுவினர்!!](https://enewz.in/wp-content/uploads/2023/01/ff-14-696x522.jpg)
நடிகர் தனுஷ் வாரிசு பட தயாரிப்பாளருடன் இணை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ்:
திரையுலகில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என ரவுண்டு கட்டி நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கை கோர்க்க இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தெலுங்கு இயக்குனர் கிஷோர் ரெட்டி படைப்பில் உருவாக இருக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
பிக் பாஸ் 6 ன் முதல் பைனலிஸ்ட் இவர்தான்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய் டிவி நிர்வாகம்!!
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபட்டு வரும் நிலையில் இப்படி தெலுங்கு படத்தில் கமிட்டாவதை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் திரைப்படத்திற்கு முன்னர் தெலுங்கு இயக்குனர் சேகர் கமலா இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு படத்தில் நடிகர் தனுஷ் கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.