தரமான செய்கை.., “AK 62” படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0
தரமான செய்கை.., "AK 62" படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
தரமான செய்கை.., "AK 62" படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தில் இருந்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார்:

தென்னிந்திய தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அயராமல் உழைத்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனத்தை பெற்றது. தற்போது அதே இயக்குனருடன் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஜனவரி 11ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ஆன்லைன் புக்கிங் வேலைகளில் ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் படைப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகின. மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

யார்ரா Boomer, நான் Honour., அமுதவாணனை துவைத்தெடுத்த விக்ரமன்! நெத்தியடி பதிலால் ஹவுஸ் மேட்ஸ் ஷாக்!!

இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ஏகே 62வில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் தனுஷை பேசி வந்த நிலையில், தற்போது தனி ஒருவன் படத்தில் வில்லனாக பட்டையை கிளப்பிய நடிகர் அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று ஒத்த காலில் நிற்கும் நடிகர் சந்தானம் படத்தில் லீடு ரோலில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here