Home செய்திகள் கரையைக் கடந்த ரெமல் புயல்.. துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தளர்வு.. முழு விவரம் உள்ளே!!

கரையைக் கடந்த ரெமல் புயல்.. துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தளர்வு.. முழு விவரம் உள்ளே!!

0
கரையைக் கடந்த ரெமல் புயல்.. துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தளர்வு.. முழு விவரம் உள்ளே!!

கடந்த ஒரு வார காலமாக வடக்கு வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ரெமல் புயல் மேற்குவங்கம் – வங்கதேசம் இடையை நேற்று இரவு 10. 30 முதல் அதிகாலை 12.30 மணிக்குள் தீவிரப் புயலாக கரையை கடந்தது.

மேலும் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . ‘ரெமல் புயல்’ கரையை கடந்த நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC GROUP – 4 முக்கியமான கேள்விகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here