இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தெலுங்கு திரையில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அண்மையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய சமந்தா சோசியல் மீடியாவில் ஆக்டிவ் காட்டி வருகிறார்.
![](https://enewz.in/wp-content/uploads/2022/06/Naga_Chaitanya_Samantha_divorc_1200x768.webp)
இப்படி இருக்கையில் இவரது திருமணம் குறித்து முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த இவருக்கு 2 ஆவது திருமணம் செய்து வைக்க இவரது குடும்பத்தினர் மும்முரம் காட்டி வருகின்றனராம். இதனால் சொந்தத்தில் ஒரு பையனை திருமணம் செய்து கொள்ளும் படி சமந்தாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனராம்., ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.