Home செய்திகள் ஒரே மாதத்தில் தமிழக மக்களுக்கு அடித்த 3 ஜாக்பாட்…, முதல்வர் மு க ஸ்டாலின் சொன்ன தகவல்!!!

ஒரே மாதத்தில் தமிழக மக்களுக்கு அடித்த 3 ஜாக்பாட்…, முதல்வர் மு க ஸ்டாலின் சொன்ன தகவல்!!!

0
ஒரே மாதத்தில் தமிழக மக்களுக்கு அடித்த 3 ஜாக்பாட்…, முதல்வர் மு க ஸ்டாலின் சொன்ன தகவல்!!!
தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர சமீபத்தில் தென் மாவட்டம் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இதை தொடர்ந்து இப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 பணமும் வழங்கியுள்ளனர். இப்படி மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது சென்னை நந்தம்பாக்கத்தில் அயலக தமிழர் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர், தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை, நிவாரணத் தொகை, உரிமை தொகை போன்றவை இம்மாதம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரே மாதத்தில் மட்டும் தமிழக மக்களுக்கு 8000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here