2024 தமிழக சட்டசபை கூட்டத்தொடர்., இந்த தேதியில் தான்? குடும்ப தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்!!!

0
2024 தமிழக சட்டசபை கூட்டத்தொடர்., இந்த தேதியில் தான்? குடும்ப தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்!!!

தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இம்மாதம் (ஜனவரி) நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு விதமான அரசு நிகழ்ச்சிகள் காரணமாக, அடுத்த மாதத்தின் (பிப்ரவரி) 2வது வாரத்தில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இக்கூட்டத்தொடரில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.

இதற்காக துறைவாரியாக அமைச்சர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு பட்ஜெட் அறிக்கையை தயார் செய்து வருகிறார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், பொதுமக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்படலாம். அந்த வகையில் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறும் “கலைஞர் மகளிர்” திட்டத்தை, மேலும் விரிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

ராமர் கோயில் கும்பாபிஷேகம்., அயோத்தியில் குவிந்த திரை பிரபலங்கள் லிஸ்ட்.,  புகைப்படங்கள் வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here