பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி – சீரிஸ் நடக்குமா..?

0
Paksitan Cricketers Corona Virus affected
Paksitan Cricketers Corona Virus affected

இங்கிலாந்து தொடரில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் வீரர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

கொரோனா தாக்கத்தின் மத்தியில் சுற்றுப்பயணம்..!

pakistan cricketers
pakistan cricketers

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கு செல்வதற்கு முன் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் பாகிஸ்தான் வீர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதித்த வீர்கள்..!

Pakistan Team
Pakistan Team

ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ், வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், ஹைதர் அலி, சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் மற்றும் பஹார் ஜமான், முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவுப், காஷிப் பாட்டி, முகமது ஹஸ்னைன், இம்ரான் கான் ஆகிய 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

Pak - Eng Series
Pak – Eng Series

மேலும், இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணம் திட்டமிட்டபடி தொடரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி வாசிம்கான் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here