ஆசியை தும்சம் செய்த ஜிம்பாப்வே – ஒரே போட்டியில் எக்கசக்க சாதனைகளை படைத்து அசத்தல்!

0
ஆசியை தும்சம் செய்த ஜிம்பாப்வே - ஒரே போட்டியில் எக்கசக்க சாதனைகளை படைத்து அசத்தல்!
ஆசியை தும்சம் செய்த ஜிம்பாப்வே - ஒரே போட்டியில் எக்கசக்க சாதனைகளை படைத்து அசத்தல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

AUS VS ZIM!

ஜிம்பாவே மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வந்தது. இதற்கான முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 5 மற்றும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை 141 ரன்களுக்கு சுருட்டியது. இதன் பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளித்து அதிக ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே சாதனை ஒன்றை புரிந்துள்ளது. அதாவது இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி வரலாற்றில் கடந்த 1983, 2014 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றிந்தது. தற்போது நீண்ட நாட்கள் கழித்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளது. மேலும் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை ஜிம்பாப்வே தங்களது சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் பெற்ற வெற்றியை ஜிம்பாப்வே அணி கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here