T20 WC 2022: 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்திய நெதர்லாந்து!!

0
T20 WC 2022: 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்திய நெதர்லாந்து!!
T20 WC 2022: 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்திய நெதர்லாந்து!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலக கோப்பை 2022:

டி20 உலக கோப்பை தொடரில், குரூப் 2வில் உள்ள நெதர்லாந்து அணியை எதிர்த்து, ஜிம்பாப்வே அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய, ஜிம்பாப்வே அணியினர் பவர் பிளே ஓவர் முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், சீன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். இவர்களும், ஒரு கட்டத்தில் சீன் வில்லியம்ஸ் (28), சிக்கந்தர் ராசா (40) என வெளியேற அடுத்து வந்தவர்களும் நெதர்லாந்தின் பவுலர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் விளைவால், ஜிம்பாப்வே அணி 19.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

T20WC.., டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பீல்டிங் தேர்வு., இந்திய அணி அதிக இலக்கு நிர்ணயிக்குமா??

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில், மேக்ஸ் ஓ’டவுட் (52) மற்றும் டாம் கூப்பர்(32) அதிரடியால் 18 வது ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அதாவது, நெதர்லாந்து அணி 18 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஏற்கனவே நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததால், இந்த வெற்றியானது மற்ற அணிகளுக்கு பெரிதளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here