ஜிகா வைரசால் 28 பேர் பாதிப்பு – அதிகரிக்கும் நோயின் தாக்கம்!!!

0
ஜிகா வைரசால் 28 பேர் பாதிப்பு - அதிகரிக்கும் நோயின் தாக்கம்!!!
ஜிகா வைரசால் 28 பேர் பாதிப்பு - அதிகரிக்கும் நோயின் தாக்கம்!!!

கொரோனா 2வது அலையின் தாக்கம் இன்னும் குறையாமல் இருக்கும் இநேரத்தில் புதிதாக பரவி வரும் ஜிகா வைரஸின் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த புது நோயினால் கேரளாவில் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் ஜிகா வைரஸ்…

கொரோனா 2வது அலையின் நோய் பரவல் மிக அதிக அளவில் இருந்தது. இந்த நோய் பரவலால் இந்தமுறை பல உயிர்கள் பலியானது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் தாக்கத்தை குறைக்க பல முயற்சிகளை எடுக்கப்பட்டு வந்தன. இந்த பரவலால் இருந்த ஊரடங்கு காரணமாக மக்கள் பல கஷ்டங்களை கடந்து வந்தனர். இந்நிலையில் 2வது முடியாத இந்நேரத்தில் கொரோனா 3வது அலை வர போவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கேரளாவில் ஜிகா வைரஸ்...
கேரளாவில் ஜிகா வைரஸ்…

அதற்கான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கமே இன்னும் முடியல அதுக்குள்ள அடுத்த வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டது. கேரளா மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. நோய் பரவலால் அதிக கட்டுப்பாடுகள் விதிமுறைகளை கேரளா அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வரும் கேரளாவில் இப்பொழுது ஜிகா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. இந்த புது வைரஸால் இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் 28 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்ட்டுள்ளனர்…

கேரளாவில் கடந்த மாதம் 24வயதான கர்ப்பணி பெண் ஒருவர் காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் போன்ற அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த அவரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆராய்ச்சி செய்தனர். பின் அந்த பெண்ணுக்கு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதன்பின் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் அதிகம் பரவி வருகிறதாம். நேற்றைய கணக்கின்படி 23 பேருக்கு ஜிகா வைரஸ் பரவியுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

கேரளாவில் 28 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்ட்டுள்ளனர்...
கேரளாவில் 28 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்ட்டுள்ளனர்…

இந்நிலையில் அதே மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனையரா பகுதியில் 2 பெண்களுக்கு ஜிகா வைரஸ் பரவியுள்ளது. அவர்கள் 35 மற்றும் 29 வயதுடையவர்கள் ஆவார்கள், அதேபோல் குன்னுக்குழி பகுதியில் 38 வயதுடைய பெண்ணுக்கும் பட்டம் பகுதியில் 33 வயதுடைய ஆண் மற்றும் கிழக்கேகோட்டை பகுதியில் 44 வயதுடைய பெண்ணுக்கும் இந்த ஜிகா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இன்றைய கணக்கின்படி ஜிகா வைரஸால் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here