செவ்வாய் கிரகத்தில் சீன ரோவர்…. படம் எடுத்த அமெரிக்க செயற்கைக்கோள்!!!

0

செவ்வாய் கிரகத்தின் பற்றி அறிய மற்றும் அதன் மேற்பரப்பு ,உட்பரப்பு என பல வித அமைப்புகளை தெரிந்து கொள்ள பல நாடுகளும் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தில் சீனாவின் ஜூரோங் ரோவரைப் படம் பிடித்து காட்டியுள்ளது.

அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்று செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு புதிய சீன ரோவரை படம் பிடித்துள்ளது. எம்.ஆர்.ஓ செயற்கைக்கோள் தரையிறங்குவதற்கு சற்றுமுன் தூரத்தில் ஜூரோங் ரோபோவின் புகைப்படத்தை படம் பிடித்துள்ளது. இந்த எம்.ஆர்.ஓ வில் உள்ள ஹைரைஸ் கேமரா, ஜூரோங் பேக்ஷெல் மற்றும் ஹீட்ஷீல்ட் போன்ற கூறுகளையும் கண்டறிந்து உள்ளது. ரோவர் மே 14 அன்று செவ்வாய்  செவ்வாய் கிரகத்தின் உட்டோபியா  பிளானெட்டியா என்ற பகுதியில் தரையிறங்கியது. இது அந்த  கிரகத்தின் வடக்கு அரைக்கோளத்தின் ஒரு பரந்த நிலப்பரப்பு ஆகும்.

சீனாவின் ஜூரோங் ரோவரின் எடை சுமார் 240 கிலோ. இந்த ரோவரில் படங்களை  எடுத்து செல்லவும் ஒரு உயரமான மாஸ்டில் கேமராக்கள் உள்ளன. மேலும் ஐந்து கூடுதல் கருவிகள் உள்ளன. அவை  சுற்றுச்சூழலின் பொதுவான தன்மையை ஆராயும், இதில் கனிமவியல் மற்றும் உள்ளூர் பாறைகளின் வானிலை பகுப்பாய்வு அறியவும் உதவ கூடிய கருவிகள் ஆகியவை அடங்கும்.

தற்போது அமெரிக்க ரோவர்களை போலவே ,ஜுராங்கின் ரோவரிலும்  பாறைகளும் அவற்றின் தன்மையை மதிப்பிடுவதற்கு லேசர் பொருத்தப்பட்டுள்ளன. துணை மேற்பரப்பு நீர்-பனியைத் கண்டறிய  இதில் ஒரு ரேடாரும் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here