‘இனி தனித்தீவில் 100 நாட்கள்..’ – பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ‘சர்வைவரை’ களமிறங்கும் ஜீ தொலைக்காட்சி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தொலைக்காட்சி புதிய நிகழ்ச்சி ஒன்றை களமிறக்கியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் கமல் ஹாசன் தான் இதனை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வரை தமிழில் 4 சீசன்கள் ஒளிபரப்பாகி உள்ளது. ஹிந்தியில் எக்கச்சக்க சீசன்கள் முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கை விட ஹிந்தியில் தான் அதிக சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. ஏனெனில் அங்கு இவர்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது.

இப்படி இருக்க தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக மற்றொரு நிகழ்ச்சியை களமிறக்கவுள்ளது ஜீ தொலைக்காட்சி. அதாவது சர்வைவர் என்ற நிகழ்ச்சி வெளிநாடுகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

 ஆளில்லா தனி தீவில் 100 நாட்கள் போட்டியாளர்களை தங்க வைப்பார்களாம். இந்த நிகழ்ச்சியை ஜீ நிறுவனம் வாங்கியுள்ளதாம். மேலும் தென்னாப்பிரிக்கா அருகே ஒரு தனித்தீவை வாடகைக்கும் எடுக்க முடிவு செய்துள்ளனராம். இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்ட சில மொழிகளில் ஆரம்பிக்கவுள்ளனராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here