இனிமே இந்த ஹிட் சீரியல் ஒளிபரப்பாகாது., இது தான் லாஸ்ட் எபிசோட்., வெளியான ஷாக்கிங் நியூஸ்!!
பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவியை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். அப்படி ஒரு வருடத்தை தாண்டி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பேரன்பு.
இதில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வைஷ்ணவி தனது எதார்த்த நடிப்பால் அசத்தியிருந்தார். மேலும் இவருக்கு ஹீரோவாக நடித்துள்ள விமல் வெங்கடேசன் இதற்கு முன் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டி முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் இந்த சீரியலில் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.