கழுத்தில் மாலை, கண்ணீருடன் ‘ரோஜா’ பிரியங்கா…, வெளியான ‘சீதா ராமன்’ ப்ரோமோ…,

0
கழுத்தில் மாலை, கண்ணீருடன் 'ரோஜா' பிரியங்கா..., வெளியான 'சீதா ராமன்' ப்ரோமோ...,
கழுத்தில் மாலை, கண்ணீருடன் 'ரோஜா' பிரியங்கா..., வெளியான 'சீதா ராமன்' ப்ரோமோ...,

நடிகை ப்ரியங்கா நடிப்பில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் ‘சீதா ராமன்’ சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

சீதா ராமன்

சன் டிவியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா நல்கார். இந்த சீரியல் சுமார் 1000 எபிசோடுகளை கடந்து சின்னத்திரையில் சாதனை நிகழ்த்தி இருந்தது. குறிப்பாக, நடிகை பிரியங்கா இந்த தொடரில் நடித்திருந்த ரோஜா கதாப்பாத்திரம் பெருமளவு மக்களின் கவனம் ஈர்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு இந்த சீரியலுக்கு ரீச் அதிகம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த ‘ரோஜா’ சீரியல் முடிவடைந்த பிறகு நடிகை ப்ரியங்கா புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக அவ்வப்போது சில அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக, நடிகை ப்ரியங்கா புதிய சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொள்வது போல சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், ப்ரியங்கா நடிக்கும் புதிய சீரியலுக்கான முதல் ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கம்…,நயன்தாரா சமரசம்…,இதென்னடா சோதனை!!

‘சீதா ராமன்’ என்று பெயரிடப்பட்ட இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த ப்ரோமோவில், புதிதாக திருமணம் செய்த இளம் பெண் கொட்டும் மழையில், மாலையும் கழுத்துமாக அழுது கொண்டே நிற்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இப்படி யூகிக்கமுடியாத டிவிஸ்டுகளுடன் வெளியான ‘சீதா ராமன்’ சீரியலின் ப்ரோமோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here