விஜய் டிவிக்கு Bye சொல்லி ஜீ தமிழில் களமிறங்கிய சீரியல் நாயகி – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி வைஷ்ணவி, ஜீ தமிழ் சேனலில் புதிதாக தொடங்கவுள்ள பேரன்பு என்ற சீரியலில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி. தனது எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்தார். இதனை அடுத்து, இவர் வெள்ளித்திரையில் நடிகர் சந்தானத்தின் தங்கையாக நடிக்க கமிட்டாகி உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து, தற்போது, இவர் ஜீ தமிழ் டிவியில் பேரன்பு என்ற சீரியலில் விஜய் என்ற நாயகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரோடு முக்கிய கதாபாத்திரத்தில், செம்பருத்தி வில்லி லட்சுமி மற்றும் சீரியல் ஆக்டர் சிவகுமார் ஆகியோர் கமிட்டாகி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here