பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி சீரியல்களில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. இப்படி இருக்கையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பேரன்பு.
Enewz Tamil WhatsApp Channel
இதில் ஹீரோவாக விமல் நடிக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக ”நாம் இருவர் நமக்கிருவர்” உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள வைஷ்ணவி நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் டெலிகாஸ்ட்டாகி வந்த பேரன்பு சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.