கிரிக்கெட்டில் ரீஎன்ட்ரி கொடுக்கும் யுவராஜ் சிங் – ரசிகர்கள் உற்சாகம்!!

0

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சென்ற ஆண்டு ஓய்வு பெற்ற அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் மீண்டும் களத்துக்கு திரும்ப உள்ளார். ஓய்வு முடிவை திரும்ப பெறுவது குறித்து கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அவர் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

யுவராஜ் சிங் ரீஎன்ட்ரி:

2019 ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற யுவராஜ், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். 38 வயதான அவர் பஞ்சாப் அணிக்காக ட்வென்டி 20 போட்டிகளில் விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். யுவராஜ் பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷனுக்கு (பிசிஏ) கடிதம் எழுதியுள்ளார், அதில் தந்து ஓய்வு முடிவை திரும்ப பெற்று, பஞ்சாப் டி 20 போட்டிகளில் வெற்றிபெற உதவ ஆர்வமாக உள்ளார் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பி.சி.ஏ செயலாளர் புனீத் பாலி, கடந்த மாதம் ஓய்வில் முடிவை திரும்ப பெற்று பஞ்சாப் அணிக்காக விளையாட வேண்டும் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். மேலும் அவருடைய பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். பஞ்சாப் கிரிக்கெட்டுக்கு ஒரே நேரத்தில் விளையாடுவதற்கும், வழிகாட்டுவதற்கும் யுவராஜ் இருந்தால் சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

யுவராஜ் சிங் 2011 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2012 இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய அடி விழுந்தது. பின்பு யுவராஜ் 2013 இல் திரும்பி வந்து 2016 டி 20 உலகக் கோப்பை மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார், ஆனால் 2017ம் ஆண்டில் மோசமான ஆட்டம் காரணமாக அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், யுவராஜ் 40 டெஸ்ட், 304 ஒருநாள் சர்வதேச மற்றும் 58 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒட்டுமொத்தமாக, அவர் 231 டி 20 களில் விளையாடியுள்ளார் மற்றும் 4857 ரன்கள் எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here