6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்., தனது சாதனையை மகனுடன் கொண்டாடிய இந்திய வீரர்!!

0
6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்., தனது சாதனையை மகனுடன் கொண்டாடிய இந்திய வீரர்!!
6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்., தனது சாதனையை மகனுடன் கொண்டாடிய இந்திய வீரர்!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 15 ஆண்டுகளுக்கு முன் தான் நிகழ்த்திய சாதனையை தனது மகனுடன் கொண்டாடியுள்ளார். அதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யுவராஜ் சிங் அசத்தல்

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடி வெற்றிக்கு உதவியாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். மேலும் ஒரு சில கடினமான போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றி பெற வைத்தவர். அதன்படி இவர் ஒரு போட்டியில் செய்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் எதிரணி வீசிய அனைத்து பந்துகளையும் நாலாபுறமும் சிதறடித்தார். அப்போது ஒரு ஓவரில் வீசப்பட்ட அனைத்து பந்துகளையும் சிக்ஸராக அடித்து சாதனை படைத்தார் (அதாவது 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்தார்). அந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஓபன் டென்னிஸ்.., தமிழக மண்ணில் பட்டம் வென்ற செக் நாட்டு வீராங்கனை!!!

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தனது 15 ஆண்டு கால வெற்றியை தனது 9 வயது மகன் ஓரியன் கீச் சிங் உடன் கொண்டாடினார். இதற்கான வீடியோவை அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், “15 ஆண்டுகளுக்குப் பிறகு இதை ஒன்றாக பார்க்க எனது மகனை விட ஒரு சிறந்த துணையைக் கண்டுபிடித்திருக்க முடியாது” என்று ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here