ஒரு ரசிகரின் வாழ்க்கைக்காக யுவன் சங்கர் ராஜா செய்த காரியத்தை பாருங்களே – வேற லெவல் சார் நீங்க!!

0

திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது அவர் தனது ரசிகருக்காக சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

யுவன் ஷங்கர்

அரவிந்தம் படத்தில் இருந்து இவரது பயணத்தை ஆரம்பித்து தற்போது பல படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். பலரின் மனக்கவலைகளை தீர்த்து வைப்பதில் பெரும் பங்கு இவருக்கு உள்ளது. யுவன் பாடல் பிடிக்காதவர்கள் யாருமே இருக்கவும் மாட்டார்கள்.

இதுவரையிலும் பல விருதுகளை குவித்துள்ளார். மேலும் இளையராஜாவின் மகன் என்பதால் மட்டும் இவருக்கு இந்த பெயரும் புகழும் இல்லை. அவரின் தனி திறமை தான் இந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு அவர் இணங்கியுள்ளார். அதாவது அவரது ரசிகர் ஒருவர் தனக்கு ஹாய் சொன்னால் புகைப்பழக்கத்தை விட்டுவிடுவேன் என்று கமன்ட் செய்திருந்தார். அதற்கு இணங்கி தனது ரசிகரின் நலனுக்காக ஹாய் என்று மெசேஜ் செய்துள்ளார்.

இதிலிருந்தே அவர் ரசிகர்களுக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்து வருகிறார் என்பது தெரிகிறது. ஏனெனில் அவருக்கு இருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு கமன்ட்டையும் படிப்பதே பெரிய விசயம். அதில் பதிலளித்ததை பார்த்து ரசிகர்கள் புல்லரித்து போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here