கைது செய்யப்பட்ட யூடியூபர் TTF வாசன் சிறையில் அடைப்பு…,ஓட்டுநர் உரிமமும் ரத்து?

0
கைது செய்யப்பட்ட யூடியூபர் TTF வாசன் சிறையில் அடைப்பு...,ஓட்டுநர் உரிமமும் ரத்து?
கைது செய்யப்பட்ட யூடியூபர் TTF வாசன் சிறையில் அடைப்பு...,ஓட்டுநர் உரிமமும் ரத்து?

பைக் மூலம் சாகசம் செய்து அதனை யூடியூப் இணையத்தில் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் யூடியூபர் TTF வாசன். இவர் காஞ்சீபுரம் அருகே பைக்கில் வீலிங் செய்து நேற்று விபத்தில் சிக்கிய நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்த வகையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட TTF வாசன் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்கும்படி தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி அக்டோபர் 3 ஆம் தேதி வரை அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் உரிய அனுமதி இல்லாமல் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு ஹெல்மெட்டை பயன்படுத்தியதற்காகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here